பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை


கட்டை ராஜா

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் பிரபல ரவுடியாகவும் கூலிப்படை தலைவனாகவும் வாழ்ந்து வந்த கட்டை ராஜா என்பவருக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றம்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் ரவுடி ராஜா என்கிற கட்டை ராஜா. இவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. மொத்தம் 16 கொலை வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றான 2013-ம் ஆண்டு திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில்நாதன் கொலை வழக்கு கும்பகோணம் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பெஞ்சமின் ஜோசப் விசாரணை நடத்தினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனையும், மேலும் கட்டை ராஜாவின் கூட்டாளிகளான தாய் மாமன் ஆறுமுகம் மற்றும் தம்பி செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

x