போலி சான்றிதழ் விவகாரத்தில் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை @ சிதம்பரம்


போலி சான்றிதழ்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி-மீதி குடி சாலையில் கடந்த 17-ம்தேதி அண்ணாமலை, பாரதிதாசன் மற்றும் கேரளா, கர்நாடகா பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழ்கள் சாலையில் கிடந்தன.

இது தொடர்பாக கிள்ளை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர் தீட்சிதர் (38), நாகப்பன் ( 45) ஆகியோரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். சங்கர் தீட்சிதர், நாகப்பன் ஆகியோரது வங்கிக் கணக்கில் கடந்த சில ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதால், அவர்களின்6 வங்கிக் கணக்குகளை முடக்கிவைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் பீட்டர், பெங்களூரு கவுதமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.