சென்னை | மாமனாரை கொலை செய்த மருமகன் கைது


சென்னை: மதுரவாயல் பிள்ளையார் கோயில் 7-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (65). லாரி ஓட்டுநர். வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோயிலில் கடந்த மாதம் 23-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், மறுநாள் காலை தலையில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுதொடர்பாக கோயம்பேடு போலீஸார் விசாரித்தனர். கண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது அவரது மருமகன் மகேஷ் (36) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன்பு மகேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருமகனை கண்ணன் கண்டித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் மாமனார் தலையில் கல்லை போட்டு மருமகன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.