காஞ்சிபுரம் | மூதாட்டியை கொன்று ரூ.6 லட்சம் நகை கொள்ளை


காஞ்சிபுரம்: மூதாட்டியை கொலை செய்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ளநகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், வாலாஜாாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா(65). இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். இவரது மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் வீட்டு மாடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் வாடகைக்கு உள்ளனர். சுகுணாவின் வீட்டருகே அங்கன்வாடி, பள்ளி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாய விலைக் கடை ஆகியவை உள்ளன. இதனால் பகலில் எப்போதும் மக்கள் இந்த பகுதியில் அதிகம் இருப்பர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுகுணாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுகுணாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

வாலாஜாபாத் போலீஸார் சுகுணாவின் சடலத்தை மீட்டுசெங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.