வன விலங்குகளை வேட்டையாட 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


ஓசூர்: அஞ்செட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாட இரு நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள வண்ணத்திப்பட்டி மலைக் கிராமத்தில் ஒருவர் வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக அஞ்செட்டி காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பங்கஜம் தலைமையிலான அஞ்செட்டி போலீஸார், வண்ணத்திப்பட்டி மலைக் கிராமத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த பசப்பா (51) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பசப்பா -வை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த இரு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

x