விருதுநகரில் போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளி கைது


விருதுநகர்: விருதுநகரில் போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (47). இவர் , விருதுநகர் அருகே உள்ள சங்கர லிங்காபுரத்திற்கு வாழைத்தார் வெட்டுவதற்காக கூலி வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்த ல் செய்துள்ளார். தனது பெரியம்மா வீட்டில் வசித்து வரும் சிறுமி இது குறித்து குடும்பத்தினிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இது குறித்து விருதுநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து பிச்சை மணியை இன்று கைது செய்தனர்.

x