கடலூர் பகுதிகளில் வீட்டை உடைத்து திருடியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது!


கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் கடந்த மாதம் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு, வீட்டில் நிறுத்தி வைத்திருந் த மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது சம்பந்தமாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் இளவரசனார்கோட்டை எஸ்.மலையனூரை ச் சேர்ந்த மணிகண்டன் (37), ஐய்யப்பன் (20), அருள், அய்யனார் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன் மேல் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் ஐய்யப்பன் ஆகியோர் மீது முது நகர், திருப்பா திரிப்புலியூர், புது நகர், நெல்லிக் குப்பம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

இவர்களின் தொடர் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார், குற்றவாளிகள் மணிகண்டன், ஐய்யப்பன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில் உள்ள மணிகண்டன், ஐய்யப்பன் ஆகியோரிடம் உத்தரவு நகலை வழங்கினர்.

x