வடமதுரை அருகே கிணற்றில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சித்துவார்பட்டி மலைக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி மகள் வினோதினி (20). இவரது தாயார் விபத்தில் இறந்த நிலையில், தனது பெரியப்பா வீ்ட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவரைக் காணவில்லை. உறவினர்கள் பல பகுதிகளில் தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை வினோதியின் உடல் சித்துவார்பட்டி அருகிலுள்ள தோட்டத்து கிணற்றில் மிதந்தது தெரிய வந்தது.தகவல் அறிந்து சென்ற வடமதுரை போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.