மனைவியின் கூடா நட்பால் விபரீதம்: மாமியார் உட்பட 3 பேரை கொன்ற இளைஞர் கைது - பின்னணி என்ன?


பாலு, பாரதி, அண்ணாமலை, ராஜேஸ்வரி

ராணிப்பேட்டை: சோளிங்​கர் அருகே மாமி​யார் உட்பட 3 பேரைக் கொலை செய்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். ராணிப்​பேட்டை மாவட்​டம் சோளிங்​கர் அடுத்த கொடைக்​கல் புதுகுடியனூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பாலு (30). தொழிலா​ளி. இவரது மனைவி புவனேஷ்வரி(26). இவர்​களுக்கு ஒரு பெண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில், பாலு​வின் சித்​தப்பா மகனான விஜய் (26) என்​பவருக்​கும், புவனேஸ்​வரிக்​கும் கூடாநட்பு ஏற்​பட்​டுள்​ளது. இதையறிந்த பாலு இரு​வரை​யும் கண்​டித்​துள்​ளார்.

இந்த தகராறு காரண​மாக கடந்த சில மாதங்​களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த புவனேஷ்வரி, வாலாஜா அடுத்த கீழ்​புதுப்​பேட்டை பகு​தி​யில் உள்ள தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், புவனேஸ்​வரி 8 மாதம் கர்ப்​ப​மாக உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதையறிந்த பாலு ஆத்​திரமடைந்​து, நேற்று முன்​தினம் இரவு புவனேஷ்வரியை சந்​தித்து தகராறில் ஈடு​பட்​டுள்​ளார். அப்​போது, அங்​கிருந்த மாமி​யார் பார​தியை கத்​தி​யால் வெட்​டிக் கொலை செய்​து​விட்​டு, அங்​கிருந்து பாலு தப்​பிச்​சென்​றார்.

காவல் நிலையத்தில் சரண்: பின்​னர், கொடைக்​கல் பகு​தி​யில் உள்ள தம்பி விஜய் வீட்​டுக்​குச் சென்​றார். அங்கு விஜய் இல்​லாத​தால் அவரது தந்தை அண்​ணா​மலை(52), தாய் ராஜேஸ்​வரி (45) ஆகியோரைக் கொலை செய்​து​விட்​டு, வாலாஜா காவல் நிலை​யத்​தில் சரணடைந்​தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் வாலாஜா போலீ​ஸார் கீழ்​புதுப்​பேட்டை பகு​திக்​கு சென்று பாரதி உடலை​யும், கொண்​டப்​பாளை​யம் காவல் துறையினர் அண்​ணா​மலை மற்​றும் ராஜேஸ்​வரி ஆகியோரின் உடல்​களை​யும் கைப்​பற்​றி, பிரேதப் பரிசோதனைக்​காக வேலூர் மாவட்​டம் அடுக்​கம்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், இதுகுறித்து வாலாஜா மற்​றும் கொண்​டப்​பாளை​யம் காவல் துறை​யினர் தனித்​தனி​யாக வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். பின்​னர், வாலாஜா போலீ​ஸார் பாலு​வைக்​ கைது செய்​து, வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்.

x