கடலூர்: கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைது


கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரை கடந்த 2005ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் 13 நபர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்து. இதில் ராமு உட்பட 14 பேரில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேல் முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் ராமுவைத் தவிர மாற்றவர்களின் தண்டனையை ரத்து செய்தது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சதா சிவத்தின் இரண்டாவது மகன் தொல்காப்பியன், மூன்றாவது மகன் ஈசன் ஆகிய இருவரும் தந்தையை கொலை செய்த வழக்கில் இருந்த சக்தி முருகன் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய தகவல் தனிப் பிரிவு மூலமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமாருக்கு கிடைத்தது. கிடைத்துள்ளது. இதையடுத்து, கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்களை கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று, கடலூர் டிஎஸ்பி ரூபன் குமார் மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் குமார், உதவி ஆய்வாளர் எழிலரசி, போலீஸார் கொண்டு குழுவினர் கீழ் குமாரமங்லத்தில் கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்த சதா சிவம் மகன்கள் தொல் காப்பியன் (23), ஈசன் (19), அவர்களது கூட்டாளிகள் விழுப்புரம் மாவட்டம் கலித்திராம்பட்டு நவீன் (20), தெண்டமாநத்தம் ஆகாஷ் (21), கீழ் குமார மங்கலத்தைச் சேர்ந்த சந்தான சாமி (25), தினேஷ் என்கிற கௌதம் (22), திலீப் (எ) புண்ணியகுடி (26), கூடப்பாக்கம் சுரேஷ் (20) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 4 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

x