பாலியல் வழக்கு: திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநர் 20 ஆண்டுக்குப் பிறகு கைது!


பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரை 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாபர் சாதிக் (52). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மாணவ, மாணவிகளை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். 2005ம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறிய 9ம் வகுப்பு மாணவி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அம்மாணவிக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது போல் அவரை அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்துள்ளார்.

பின்னர் மாணவியை அழைத்துக் கொண்டு பல ஊர்களுக்கு சென்று விடுதிகளில் தங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவி காணாமல் போனது குறித்து, பெற்றோர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அம்மாணவியை போலீஸார் தேடுவதை அறிந்த ஜாபர்சாதிக் மாணவியை ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார். போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பரை பார்க்க வந்த ஜாபர் சாதிக்கை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x