திருவாரூர் அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது!


திருவாரூர் அருகே உமா மகேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த பத்ம நாதன் (48). இவர், மே 1ம் தேதி அன்று பூதமங்கலச்சேரி வாய்க்கால் பகுதியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா போலீஸால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆனந்த பத்ம நாதன், மனைவி சவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மது அருந்தி விட்டு வந்து தொடர்ந்து சவிதாவை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், விரக்தியடைந்த சவிதா சம்பவதன்று மதுபோதையில் பூதமங்கலச்சேரி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்த ஆனந்த பத்ம நாதனை அருகில் அறுந்து கிடந்த மின் இழுவை கம்பியால் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீஸார் சவிதாவை (42) கைது செய்து, திருவாரூர் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

x