கோவை: கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 58 உயிரிழந்த னர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தொடர்பு உடையவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதேபோல, கடந்த 2010ம் ஆண்டு கோவை மாநகரைச் சேர்ந்த சகோதர. சகோதரிகளான இரு சிறார்கள் வேன் ஓட்டுநரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மோகன் ராஜ் என் கவுன்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2012 நவம்பர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கு அடுத்து மிக முக்கிய நிகழ்வாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இருந்தது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நீதிமன்றத் துக்கு வந்த பொதுமக்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். துப்பறியும் மோப்ப நாய் மூலம் நீதிமன்ற வளாகம் முழுவதும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.