வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து சீர்காழி அருகே இளைஞர் உயிரிழப்பு


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர், மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேன் ஒன்றில் நேற்று புறப்பட்டுச் சென்றனர்.

சீர்காழி அட்டக்குளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் சென்ற போது, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை எஸ்.பி. கோ.ஸ்டாலின் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

x