இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விமர்சனம் செய்து முக நூலில் கருத்துகளை பதிவிட்ட, திருநெல்வேலி மேலக்கரையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் முருகன் கண்ணா என்பவர் மீது தச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தும் வகையல் செயல்பட்டதுடன், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதாக இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் சமூக வலை தளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிக்க மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.