சேலம் மாவட்டம் முழுவதும் பண்ணை வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பண்ணை வீடுகளில் வசித்து வந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் பண்ணை வீடுகள், தனியாக தோட்டத்துடன் இருக்கும் வீடுகள், தனியாக உள்ள வீடுகள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க மாவட்ட எஸ்பி கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 6 உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பண்ணை வீடுகளின் விவரங்களை போலீஸார் கணக்கெடுத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமராக பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் சமீபத்தி்ல் ஈரோடு மாவட்டத்தில் வயதான தம்பதி கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் கணக்கெடுத் து வைக்கப்பட்டுள்ள பண்ணை வீடுகளில், தனியாக உள்ள வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா ? பொருத்தப்படவில்லை என்றால் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்த வேண்டும் என எஸ்பி கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 6 உட்கோட்டங்களில் அந்தந்த காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் போலீஸார் நேரில் சென்று சிசிடிவி கேமராக பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தும், வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், இரவு ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸார் அனைத்து பகுதிக்கும் சென்று வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. வெளியூர் பயணம் மேற்கொண்டால், காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. புதியதாக ஏதேனும் ஆள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமப் புறங்களில் தனியாக ஓட்டு வீட்டில் தான் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளி யாக இருப்பதால், அனைவருக்கும் சிசிடிவி வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அனைவராலும் ரூ.20 ஆயிரம் செலவு செய்து வைக்க முடியவில்லை . இதற்கான மாற்று ஏற்பாடுகளை போலீஸார் தெரிவிக்க வேண்டும், என்றனர்.