[X] Close

கேட்பாரற்ற ரூ.25 லட்சம் பணத்தை மாநில கருவூலத்தில் ஒப்படைத்த போலீஸ்


no-claimant-for-rs-25-lakh-left-in-restaurant

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Jun, 2018 16:13 pm
  • அ+ அ-

அண்மையில் சென்னை அண்ணாநகர் சரவணபவன் ஓட்டல் வெயிட்டர் ஒருவரை காவல்துறை ஆணையர் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். காரணம் கடைக்கு வந்தவர்களில் யாரோ விட்டுச் சென்ற பணப்பையை போலீஸில் ஒப்படைத்த நேர்மை.

வறுமையிலும் செம்மை பாணியில் அவர் என்னவோ கிடைத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்துவிட்டார். ஆனால், அந்தப் பணத்தை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதனால் பணம் மாநில கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 30-ம் தேதி வெயிட்டர் ரவி (வயது 40) ஒரு கைப்பை இருப்பதைக் கவனித்துள்ளார். அந்தப் பையை எடுத்து அவர் ஓட்டல் மேனேஜர் லோகநாதனிடம் கொடுத்துள்ளார். ஓட்டல் நிர்வாகமும் மாலைவரை யாராவது வருவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், யாரும் வராததால் அந்தப் பணப் பையை போலீஸில் ஒப்படைத்தது. கிட்டத்தட்ட 14 நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் அந்தப் பணத்தைக் கோரி போலீஸுக்கு வரவில்லை. 

சிசிடிவி காட்சியில் மே 30 அன்று காலை 10.30 மணிக்கு இரண்டு பேர் உணவருந்திவிட்டு பணப்பையை மறந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அவர்களது அடையாளத்தை வைத்தும் அவர்களை கண்டறியமுடியவில்லை.
இந்நிலையில் கணக்கில் வராத பணம் என்பதாகக் கருதி அந்தப் பணத்தை காவல்துறையினர் மாநில கருவூலத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறை துணை ஆணையர் வி.குணசேகரன், "இந்தப் பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. பணத்தை நீண்ட காலம் நாங்களே வைத்துக்கொள்ள முடியாது. அதனாலேயே கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டோம். ஒருவேளை யாராவது உரிமையாளர்கள் இருந்தால் எங்களையோ அல்லது மாவட்ட கருவூல அதிகாரியையோ அணுகி உரிய சான்றினை ஒப்படைத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.

நேர்மையாக இருந்து பணத்தை நிர்வாகத்திடம் ஒப்படைத்த வெயிட்டர் ரவிக்கு உதவி மேலாளர் பதவி வழங்கியிருக்கிறது ஓட்டல் நிர்வாகம்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close