[X] Close

ஓடும் பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்: வைரலான வீடியோவால் போலீஸில் சிக்கினார்


man-masturbates-on-kolkata-bus-caught-after-woman-puts-video-on-facebook

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 May, 2018 12:14 pm
  • அ+ அ-

கொல்கத்தாவில் நகரப் பேருந்தில் இளம் பெண்ணின் முன்னால் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக அதன் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கிருஷ்ணவ் மித்ரா என்ற பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் நீண்ட பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில், "நானும் எனது தோழியும் ஹெடுவாவில் இருந்து வீட்டுக்கு 30B/1 பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது என்னை யாரோ உற்று நோக்குவதுபோல் இருந்தது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பேருந்தில் இதற்கு முன் பலமுறை என்னிடம் தவறாக நடந்த நபர் அமர்ந்திருந்தார். நான் பார்ப்பதை கவனித்தவுடன் அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கினார். நான் அதிர்ந்து போய் கூச்சலிட்டேன். ஆனால், பேருந்தில் இருந்த ஓட்டுநரோ, நடத்துனரோ, சக பயணிகளோ யாரும் எனக்கு உதவவில்லை. இதற்கு முன்னர் ஒருமுறை என்னைப் பார்த்தவுடன் அந்த நபர் தனது கால்சட்டை ஜிப்பைக் கழற்றி அந்தரங்க உறுப்பை காட்டினார். அன்றைய நாள் மிக மோசமான நாள். நான் மிகுந்த வேதனைக்குள்ளானேன். அன்றும் எனக்கு யாரும் உதவவில்லை. எனவேதான் இந்தமுறை அந்த நபரின் செய்கையை வீடியோவாக பதிந்து அதை கிராபிக்ஸ் செய்து வெளியிடுகிறேன். இதன்மூலமாவது எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானது. மதியம் 1 மணியளவில் மித்ரா அந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். இரவு 8.30 மணியளவில் கொல்கத்தா போலீஸார் அந்த நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இது குறித்து அவர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில், "இவர்தான் அந்தப் பேருந்தில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர். அவரைப் பிடித்துவிட்டோம். நிச்சயமாக தண்டனை வழங்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தனர். அசித் ராய் என்ற அந்த நபர் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது போன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்கத்தா போலீஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close