நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் வெளியாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் விமர்சனம் இது...
நாயகியை மையப்படுத்திய பிரச்சினையும், அதைத் தீர்ப்பதற்கான அதகள நகர்களுமே என்ற சுந்தர்.சி-க்கு ஈஸியாக வரும் ஒன்லைனில் நகைச்சுவையைத் தூவி திரைக்கதையை வடிவமைத்திருப்பது ப்ளஸ்.
ஆனால், முழுமையாக எங்கேஜ் செய்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடும்போது, முதல் பாதி முழுவதுமே காமெடிக்கு ஓய்வு அளித்திருப்பது நிச்சயம் மைனஸ் தான்.
எனினும், படத்தின் இரண்டாம் பாதியில் ‘மணி ஹெய்ஸ்ட்’ நோக்கி நகர்ந்து, காமெடியில் சரவெடியாட்டம் நிகழ்த்தப்பட்டிருப்பது மிகப் பெரிய ப்ளஸ்.
ஹீரோவாக சுந்தர்.சி கச்சிதமான பங்காற்றியிருப்பதும், பல கெட்டப்கள் - உடல்மொழிகளுடன் காமெடியனாக வடிவேலு கம்பேக் கொடுத்திருப்பதும் இன்னொரு முக்கிய ப்ளஸ்.
ஆனால், திரைக்கதை ஆங்காங்கே சிறுவர்கள் கூட ‘சிரிக்கும்’ விதமாக லாஜிக் ஓட்டைகள் நிறைந்திருப்பது மைனஸ்தான். எனினும், அதைப் பற்றி கவலைப்பட வைக்காத அளவுக்கு இரண்டாம் பாதியில் காமெடியை புகுத்தியிருப்பது ப்ளஸ்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதையை நகர்த்தியதும், ஹீரோயினாக கேத்ரின் தெரசா சூப்பர் கம்பேக் கொடுத்திருப்பதும் இன்னொரு ப்ளஸ்.
சில நிமிடங்களே வரும் வாணி போஜன் தொடங்கி முனீஷ்காந்த், பகவதி பெருமாள், சந்தான பாரதி, அருள்தாஸ், மைம் கோபி, காளையன் ஆகியோர் உறுதுணை நடிப்பும் பங்களிப்பும் ப்ளஸ்தான்.
மணி ஹெயிஸ்ட் காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டிய ஒளிப்பதிவு ப்ளஸ் என்றால், சுமார் ரக பாடல்கள் மைனஸ். ஆனாலும், பின்னணி இசை அதகளம் செய்திருப்பது ப்ளஸ்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ‘கேங்கர்ஸ்’ படத்தில் ஈர்க்காத முதல் பாதி, லாஜிக் ஓட்டைகளைத் தாண்டி, இரண்டாம் பாதியில் ஃபுல் மீல்ஸ் காமெடி உறுதி என்பதால் சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் ப்ளஸ்கள்தான் அதிகம்.