பெல்ஜியம் கார் ரேஸில் அஜித்குமார் அணிக்கு 2-வது இடம்


அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ கடந்த 10-ம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர், கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக ‘அஜித் குமார் ரேஸிங்' என்ற அணியை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் அணி, 3-வது இடம் பிடித்தது. அடுத்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸிலும் 3-வது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் ஸ்பா பிரான்கோர்சாம்ப்ஸ் சர்க்கியூட்டில் நடைபெற்ற ஜிடி-4 யூரோபியன் சீரிஸ் ரேஸில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் அவர் அணி, 2-வது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக, அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்கு இது பெருமையான தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அஜித்குமார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

x