மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார். கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீஸார் கடந்த வாரம் சோதனை நடத்த இருந்தனர். அங்கு மூன்றாவது மாடியில் ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்தார்.
விஷயம் தெரிந்ததும் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து கொச்சி போலீஸிடம் நேற்று ஆஜராகி ஷைன் டாம் சாக்கோ விளக்கம் அளித்தார்.
அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் கைது செய்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.