அஜித்தின் கார் ரேஸில் பயங்கர விபத்து... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!


சென்னை: ஐரோப்பிய நாட்டின் பெல்ஜியத்தில் கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ள அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்த வைரல் வீடியோக்கள் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமாவில் அசத்தும் அஜித், கார் பந்தய வீரராகவும் முத்திரை பதித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3 வது இடம் பிடித்து சாதித்தது. அதனையடுத்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

தற்போது அஜித்குமார் ஐரோப்பிய கார் பந்தயத்தில் ஆர்வமாக கலந்துகொண்டுள்ளார். இந்த ரேஸின்போது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும் விபத்தினால் அஜித்துக்கு நல்வாய்ப்பாக காயம் எல்லை என சொல்லப்படுகிறது. விபத்துக்கு பின்னர் அஜித் நலமுடன் எழுந்துவரும் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது.

x