ரகளையான ‘ரெட்ரோ’ ட்ரெய்லர் - செதுக்கிய ‘பிரேமம்’ இயக்குநர்!


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் மே 1-ல் வெளியாகிறது. இதன் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆக்‌ஷனும் ரொமான்ஸும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான திரைமொழியை கச்சிதமாக ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறது ட்ரெய்லர் காட்சிகள்.

சூர்யாவின் கெட்டப்-கள், புத்தம்புது பூவாக பூஜா ஹெக்டே மட்டுமின்றி ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ் முதலானோரின் பிரசன்ஸும் பட்டையைக் கிளப்புகிறது. குறிப்பாக, சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் ஹைலைட்.

‘ரெட்ரோ’ பட ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு முக்கிய காரணம், ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். கார்த்திக் சுப்பராஜிக்கு இவர்தான் இந்த ட்ரெய்லரை எடிட் செய்து கொடுத்துள்ளார். இவரது எடிட்டிங் திறமைக்கு, இவர் இயக்கிய முதல் படமான‘நேரம்’ சான்று என்பது குறிப்பிடத்தக்கது.

x