‘கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீராம். பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9' மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’, ‘மாநகரம்', ‘இறுகப்பற்று’ உள்படசில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மெலிந்து அடையாளமே தெரியாதபடி காணப்படும் அவரை பற்றி பல்வேறு வதந்திகளும் எழுந்தன. அவரைகண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீ, மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதில்,ஸ்ரீராம் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரின் தனிப்பட்டஉணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நடிகர் ஸ்ரீ குறித்து வதந்தியான,ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவரது தற்போதைய நிலையை உணர்ந்து, ஸ்ரீ உடல்நிலை தொடர்பாக சமூக வலை தளங்களில் வெளியிட்ட பதிவுகளை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.