அஜித்குமாரை மீண்டும் இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்?


அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது அஜித்தின் 63-வது படம். த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை அடுத்து, அஜித்தின் 64-வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன் ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 'குட் பேட அக்லி' ஆதிக் ரவிச்சந்திரனே அவரது 64-வது படத்தை இயக்க இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

x