நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதையொட்டி, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்த் கோவை புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “குமரி அனந்தன் தூய்மையான, அரசியல்வாதி. நல்ல மனிதர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
‘கூலி’ திரைப்படம் பணிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைப்படம் வெளியாகும். இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. ‘ஜெயிலர்’ திரைப்படம் இரண்டாம் பாகம் ஆரம்பித்து விட்டோம். எப்போது முடியும் என்று தெரியவில்லை.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி உள்ளது. அதற்கு எனது வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிப்பார்” என்றார் ரஜினிகாந்த்.