அருண்​ விஜய்​க்​காக பாடிய தனுஷ்!


‘மான் கராத்​தே’ இயக்​குநர் கிரிஷ் திருக்​குமரன் இயக்​கும்​ படம்​, ‘ரெட்​ட தல’. அருண்​ விஜய்​ ஹீரோவாக நடிக்​கும்​ இதில், சித்​தி இட்​னானி, தான்யா ரவிச்​சந்​திரன் நாயகிகளாக நடிக்​கின்றனர். ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய்​, பாலாஜி முருகதாஸ் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கிறார்கள்.

சாம்​ சி.எஸ் இசையமைக்​கிறார். டிஜோ டாமி ஒளிப்​பதிவு செய்​யும்​ இந்​தப்​ படத்​தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்​சந்​திரன் தயாரிக்​கிறார். இதில் அருண்​ விஜய்​க்​காக, நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்​தப்​ பாடலுக்​கான படப்​பிடிப்​பு வெளிநாட்​டில் படமாக்​கப்​பட்​டுள்ளது. விரைவில் இதன் லிரிகல் வீடியோ வெளியாக இருக்​கிறது.தனுஷின் ‘இட்​லி கடை’ படத்​தில் அருண்​ விஜய்​ முக்​கிய கேரக்​டரில் நடித்​துவருகிறார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

x