[X] Close

சுவாரசியமான படம் ‘சர்வம் தாளமயம்’: பி.சி.ஸ்ரீராம் பாராட்டு


pcsreeram-tweets-about-sarvam-thalamayam

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 15:21 pm
  • அ+ அ-

’சர்வம் தாளமயம்’ பார்த்துவிட்டு சுவாரசியமான படம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

டிசம்பர் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் இப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.

முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் கும்ப்ளே, இயக்குநர் பாலா உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். தற்போது முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு ‘சர்வம் தாளமயம்’ படத்தைத் திரையிட்டு காட்டியுள்ளார்.

இப்படம் தொடர்பாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் “இசை மீதான ஆண்களின்  ஆர்வத்தை சொல்லும் சுவாரசியமான படம். ஜீ.வி.பிரகாஷ் , நெடுமுனி வேனு சிறப்பாக நடித்துள்ளார்கள். ராஜிவ் மேனன் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு ஜீ.வி.பிரகாஷ் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

மிருதங்க வித்வான் ஒருவரிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய நிலையைக் காரணம் காட்டி வித்வானிடம் இருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான் அவன். சாதிப் பிரச்சினையைத் தாண்டி அவனின் இசை ஆசை நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close