[X] Close

மீண்டும் இணையும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணி


karthicknaren-and-aravindswamy-joins-again

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 14:43 pm
  • அ+ அ-

'நரகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

’துருவங்கள் 16’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்க ஓப்பந்தமானார் அரவிந்த்சாமி. சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு ‘நரகாசூரன்’ என பெயரிட்டார்கள்.

இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து. வெளியீட்டு சிக்கலில் நிற்கிறது. பலமுறை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கார்த்திக் நரேன்.

’நரகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து ‘நாடகமேடை’ என்னும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் கார்த்திக் நரேன். தற்போதுள்ள சூழல்படி, அரவிந்த்சாமி நடிக்கவுள்ள படத்தை முடித்துவிட்டுத் தான் ‘நாடகமேடை’ இயக்குவார் என தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close