[X] Close

அஜித்தின் அடுத்த படம் குறித்து ட்விட்டரில் எழுந்த சர்ச்சை: எச்.வினோத் விளக்கம்


hvinoth-clarifies-about-ajith-next-film

  • kamadenu
  • Posted: 15 Nov, 2018 14:18 pm
  • அ+ அ-

அஜித்தின் அடுத்த படம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு, இயக்குநர் எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தில் தனது பணிகளை முடித்துவிட்டதால், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் எச்.வினோத். இதுதொடர்பாக போனி கபூர் - அஜித் - எச்.வினோத் மூவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், எச்.வினோத் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், “தல 59 - ‘பிங்க்’ ரீமேக் இல்லை” என்று ஒரு ட்வீட் வெளியானது. இது எச்.வினோத் தான் என்று பலரும் அதைச் செய்தியாக்கி வெளியிட்டனர். ‘பிங்க்’ ரீமேக்கில் தான் அஜித் - எச்.வினோத் இணைந்து பணிபுரிய உள்ளனர் என்பதால், இந்த ட்வீட் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.

தற்போது இது தொடர்பாக எச்.வினோத், “எனது அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வரும். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து முன்பே விலகிக் கொண்டேன். என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

எச்.வினோத்தின் இந்த அறிவிப்பால், அஜித்தின் அடுத்த படம் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close