[X] Close

ஹாட்ரிக் விஜய், ஹாட்ரிக் தீபாவளி?


vijay-hatrick

  • kamadenu
  • Posted: 15 Nov, 2018 13:57 pm
  • அ+ அ-

ஒரே விஷயத்தில் மட்டுமல்ல, மூன்று விஷயங்களிலும் ஹாட்ரிக் அடிக்கப்போகிறார் விஜய் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் சொல்லிவருகிறார்கள்.

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான சர்கார், விஜய் - முருகதாஸ் கூட்டணியின் மூன்றாவது படம்.

இந்தக் கூட்டணியின் மூன்று படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. எனவே விஜய் - முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியடித்தது என்று சொல்லிப் பூரித்து வருகிறார்கள்.

இதேபோல், விஜய் - அட்லி கூட்டணியில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. முதலில் தெறி படத்தில் இருவரும் இணைந்தார்கள். இந்தப் பெடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து, விஜய்யும் அட்லியும் இணைந்து மெர்சல் பண்ணினார்கள். உண்மையிலேயே அரசியலை மெர்சலாக்கினார் விஜய். பெரும் பரபரப்பு கிளம்பியது. பாஜகவின் எதிர்ப்பே, படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கியது. வெற்றியை, மிகப்பிரமாண்டமான வெற்றியாக்கியது.

இந்த நிலையில், தெறி, மெர்சலைத் தொடர்ந்து இப்போது சர்காரை அடுத்து விஜய்யின் படத்தை அட்லி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் வேலைகள் 2019ன் தொடக்கத்தில் ஆரம்பமாகி, 2019 தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தில் உள்ளனர். இந்தப் படம் வெற்றி அடைந்தால், தெறி, மெர்சல் தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றியும் ஒன்று சேர, விஜய் - அட்லி கூட்டணி ஹாட்ரிக் வெற்றி அடித்ததாகிவிடும்.

இங்கே இன்னொரு விஷயம்...

அட்லி, முருகதாஸ் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒரு தீபாவளிக்கு மெர்சல், அடுத்த தீபாவளிக்கு சர்கார், அதையடுத்து 2019ன் தீபாவளிக்கு அடுத்த படம் என்று ஹிட்கொடுத்தால், விஜய்யின் தீபாவளிப் படங்கள் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அடித்தன என்றும் பேர் கிடைக்கும்.

விஜய் - முருகதாஸ், விஜய் - அட்லி, விஜய் - தீபாவளி என மூன்று கூட்டணிகளிலும் ஹாட்ரிக் அடித்த பெருமை விஜய்யை அடையுமா என்பதைப் பார்ப்போம்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close