[X] Close

'மார்வெல்' உலகின் பிதாமகன் ஸ்டான் லீ மறைவு


stan-lee-passed-away

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 08:33 am
  • அ+ அ-

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் பிதாமகன் என அழைக்கப்படும் ஸ்டான் லீ நேற்று(நவம்பர் 12) நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 95.

ஸ்டான்லீ 1922ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார். மார்வெல் காமிஸின் ’ஸ்பைடர்மேன்’, ’எக்ஸ்- மென்’, ’Fantastic Four’, ’Daredevil’ ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கியவர். 

1939ஆம் ஆண்டு ’டைம்லி காமிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்த ஸ்டான் லீக்கு 16 வயது. அங்கு இருக்கும் இங்க் பாட்டில்களை நிரப்புவதே அவரது பிரதான வேலை. ஸ்டான் லீயின் கடின உழைப்பை கண்ட நிறுவன அதிகாரிகள் அவரது 19வது வயதில் ‘Captain America Foils the Traitor’s Revenge‘ என்ற சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர்.

தனக்கு கிடைத்த அந்த சிறு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஸ்டான் லீ பின்னர் படிப்படியாக முன்னேறினார்.

பின்னர் 1956ஆம் ஆண்டு தற்போது புகழ் பெற்றிருக்கும் ’Fantastic Four’ கதாபாத்திரங்களை உருவாக்கினார் ஸ்டான் லீ. 1961ஆம் ஆண்டு ’அட்லஸ்’ என்று பெயரிலிருந்து ‘மார்வெல்’ என்று பெயர் மாறியது.

1962ல் ஸ்டான் லீ உருவாக்கிய கதாபாத்திரம்தான் தற்போது பலருடைய ஆல்டைம் ஃபேவரிட். அந்த கதாபாத்திரம் ’ஹல்க்’ (Hulk). ஹல்க் மட்டுமல்லாது தற்போது புகழ்பெற்ற கதாபாத்திரங்களாக விளங்கும் ’தோர்’ (Thor), ’அயர்ன் மேன்’ (Iron-man),’ஸ்பைடர்மேன்’ (spiderman) உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை உருவாக்கியதும் ஸ்டான் லீதான். 

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் திரைப்படங்களாக உருவான பிறகு ஒவ்வொரு திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறிய காட்சியில் தலைகாட்டிவிடுவார் ஸ்டான் லீ.

கடைசியாக வெளியான ’Venom’ திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார். 95 வயாதாகும் ஸ்டான் லீயின் மரணம் காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close