[X] Close

வடசென்னை 2 எடுக்காதீங்க! ; - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்


vadachennai-2

வெற்றிமாறன் - தனுஷ்

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 11:41 am
  • அ+ அ-

வடசென்னை 2 எடுக்காதீர்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, வடசென்னை எடுக்கவில்லையென்றால், சந்தோஷமாக இருக்குமா உங்களுக்கு? இங்கே வடசென்னை படம் நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னார்களா என்று இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்தார்.

“கூகை திரைப்பட இயக்கம்” ஒருங்கிணைத்திருந்த “வடசென்னை” திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூகை நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் “வடசென்னை” திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர்கள் கரன் கார்க்கி மற்றும் சுகுணா திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் தங்களுடைய பார்வையில் வடசென்னை திரைப்படத்தின் திரைமொழி, காட்சியமைப்புகள், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து பேசினார்கள்.

நிறைவாக, இயக்குநர் வெற்றிமாறன் ஏற்புரை வழங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு வெற்றிமாறன் பதிலளித்தார்.

அப்போது அங்கிருந்த ஒருவர், ‘வடசென்னையைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். வடசென்னை என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது உங்களின் வடசென்னைப் படத்தால் அது மீண்டும் வந்துவிட்டது. இரவு நேரத்தில், வடசென்னைப் பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள்.

எனவே தயவுசெய்து வடசென்னை 2 எடுக்கவே எடுக்காதீர்கள். போதும், வடசென்னை முதல் பாகத்திலேயே எங்களை ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப் படுத்திவிட்டீர்கள். தயசெய்து கெஞ்சிக் கேட்கிறோம், வடசென்னை 2 எடுக்கவே எடுக்காதீர்கள் என்று சொன்னார்.

அதற்கு வெற்றிமாறன், உங்களின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தையும் கேளுங்கள். அடுத்தவர் பேசவும் அனுமதி கொடுங்கள். இப்போது, வடசென்னை 2 எடுக்கமாட்டேன் என்று சொன்னால், சந்தோஷமாகிவிடுவீர்களா?

இங்கு யாராவது வடசென்னை  நல்லாருக்கு என்று சொன்னார்களா? எல்லோரும் அவரவர் கருத்துக்களை வைக்கிறார்கள். அதுபற்றி விளக்குகிறேன். அவ்வளவுதான் என்று அமைதியுடனும் பொறுமையுடனும் பதிலளித்தார் வெற்றிமாறன்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close