இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?


சென்னை: இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம்.

’உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ பட இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’அலங்கு’. குணாநிதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு செய்து செய்து முடிக்கப்படும் வழக்கு ஒன்று வந்து சேர்கிறது. அதில் நிறைந்துள்ள சவால்கள்தான் ‘தி ஸ்மைல் மேன்’ திரைப்படம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர்த்து, சமுத்திரகனி நடிப்பில் ‘திரு. மாணிக்கம்’, நடிகர் தம்பி ராமையா வசனம், பாடல்கள் எழுதியிருக்கும் படம் ‘ராஜாகிளி’. இந்தப் படத்தை தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கியிருக்கிறார். ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ஃபேண்டஸி படமான ‘பரோஸ்’ 3டி-யிலும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இவை தவிர்த்து, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் முதல் சீசனில் கதையாக எல்லோரையும் மிரட்டிய பிரபலமான ‘ஸ்கிவிட் கேம்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் இன்று மதியம் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, சானியா அய்யப்பன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘சொர்க்கவாசல்’ படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிறது. ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நடிகர் பிரஷாந்தின் ‘அந்தகன்’ படம் வெளியாகிறது. பிரபுதேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் ஆஹா ஓடிடி தளத்திலும், சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணங்கள்’ கன்னட படம் அமேசான் தளத்தில் வெளியாகிறது.

x