[X] Close

நவம்பர் 16-ல் படங்கள் வெளியீட்டு சர்ச்சை: எஸ்.ஆர்.பிரபு ட்வீட்டுக்கு தனஞ்ஜெயன் பதிலடி


dhanayajeyan-repilies-for-srprabhu-tweet

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 18:11 pm
  • அ+ அ-

நவம்பர் 16-ல் படங்கள் வெளியீடு தொடர்பாக சர்ச்சை உருவாகியுள்ளது தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு ட்வீட்டுக்கு தனஞ்ஜெயன் பதிலடிக் கொடுத்திருக்கிறார்

தீபாவளி தினத்தன்று வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதியனறு ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்தது.

திடீரென்று ‘திமிரு புடிச்சவன்’ படமும் நவம்பர் 16-ம் தேதி வெளியீடு என்ற விளம்பரத்தால், இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும் ‘திமிரு புடிச்சவன்’ படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு படம் வெற்றி பெற உள்ளடக்கம் மட்டுமே முக்கியம்! சென்ற மாதம் இதை நாம் கண்கூடாகக் கண்டோம்!! ரிலீஸ் தேதி, எதிர்ப்பு, விளம்பரம், திரையின் தரம், எண்ணிக்கை போன்றவை மிகச் சிறிய காரணிகள்.  ஆனால் திரைத்துறையில்  இத்தகைய காரணங்களைச் சொல்லி பதற்றப்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நவம்பர் 16-ம் தேதி வெளியாகவுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் “நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன், இந்த முறையைத் தவிர. ’சர்கார்’ நன்றாக ஓடுவதால், எங்களுக்கு குறைந்த அளவு திரையரங்குகளே கிடைக்கும். 

எல்லா திரைப்படங்களுக்கும்  இந்த முறை திரையரங்குகள் கிடைப்பது கடினமே. அதுவும் இன்னும் 13 நாட்களில் பெரிய படமான ’2.0’ வெளிவரவிருக்கிறது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்துவிட வேண்டும் அல்லது முடிந்து போகவேண்டும் என்பது போன்ற நிலை. அதனால் தான் கவலைப்படுகிறோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close