'எதிர்நீச்சல்2’ சீரியலின் புதிய குணசேகரன் இவரா? வெளியான தகவல்!


’எதிர்நீச்சல்2’ சீரியலில் புதிய குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதன் கதைக்களமும் குறிப்பாக, ஆதிகுணசேகரன் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆதிகுணசேகரனாக மாரிமுத்துவும் நடிப்பில் அசத்தினார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர், இயக்குநர் வேல ராமமூர்த்தி நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்துவை ரசிகர்கள் மிஸ் செய்தனர்.

இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் புரோமோ ஒன்று சன் தொலைக்காட்சியில் வெளியானது. இதில் பிரியதர்ஷினி, கனிகா என முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். ஆனால், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்திக்குப் பதிலாக நடிகர் சுப்பு அருணாச்சலம் நடிக்கிறார். இவர் ‘கலகலப்பு’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

x