பொங்கலுக்கு வெளியாகிறது ‘விடாமுயற்சி’


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உட்பட பல நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அந்தப் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று தெரிகிறது

x