இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?


சென்னை: இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, சரத்குமார், ரஹ்மான் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘நிறங்கள் மூன்று’ படம் இன்று வெளியாகியுள்ளது. ஹைப்பர் லிங்க் கதைகளைக் கொண்ட இந்த படம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதோடு, நடிகர் அசோக்செல்வனின் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’, சக்தி சிதம்பரம்- பிரபுதேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய படங்களும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் கமர்ஷியல் எண்டர்டெயினரை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

இவை தவிர ‘பராரி’, ’குப்பன்’, ‘தூவல்’ ஆகிய படங்களும் வெளியாகிறது. நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் நடிகை நயன்தாராவின் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணப்படம், சுனைனாவின் ‘ராக்கெட் டிரைவர்’ சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும், 'லைன்மேன்', 'விவேசினி' ஆகிய படங்கள் ஆஹா ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஹிட்டான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஜூனியர் என்டிஆருடைய ‘தேவரா’ படத்துடைய இந்தி வெர்ஷன் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகிறது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x