பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன்


கேரள சினி​மா​வில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்​களுக்கு எதிரான பாலியல் துன்​புறுத்​தல்கள் தொடர்பாக விசா​ரித்த ஹேமா கமிட்டி, தனது அறிக்கையை வெளி​யிட்​டது. அது வெளியான பின் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது சில நடிகைகள் புகார்​களைக் கூறினர். மலையாள நடிகர் சங்கப் பொதுச் செயலா​ளராக இருந்த சித்திக் மீதும் துணை நடிகை ஒருவர் புகார் கூறி​யிருந்​தார்.

கடந்த 2016-ம் ஆண்டு திரு​வனந்​த​புரத்​தில் உள்ள மஸ்கட் ஓட்டலில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்​ததாக அவர் புகாரில் கூறி​யிருந்​தார். இதையடுத்து சித்திக் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தேடி வந்தனர். கேரள உயர்​நீ​தி​மன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்​த​தால் தலைமறைவான அவர், உச்ச நீதி​மன்​றத்​தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்​றார்.

கேரள உயர் நீதி​மன்றம் பிறப்​பித்த உத்தர​வுக்கு எதிராக சித்திக் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்திருந்த மேல் முறை​யீட்டு மனு விசா​ரணைக்கு நேற்று வந்தது.

அப்போது, “இந்த வழக்​கில், சம்பவம் நடந்து 8 வருடங்​களுக்​குப் பிறகு புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. 2018-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக சித்திக் உட்பட 14 பேர் மீது முகநூலில் பதிவிட்​டிருந்​ததாக புகாரளித்​தவர் கூறுகிறார். ஆனால், ஹேமா கமிட்​டி​யில் புகார் அளிக்க​வில்லை. இத்தனை ஆண்டுகள் அவர் ஏன் மவுனமாக இருந்​தார் என்பது கேள்விக்​குறியாக இருக்கிறது. தற்போதைய நிலை​யில் அனைத்து விவகாரத்தையும் கருத்​தில் கொண்டு சித்திக்​கிற்கு முன் ஜாமீன் வழங்​கு​கிறோம். அவர் பாஸ்​போர்ட்டை நீதி​மன்​றத்​தில் ஒப்படைக்க வேண்​டும், ​விசாரணைக்​கும் ஒத்​துழைக்க வேண்​டும்” என்று தெரி​வித்த உச்ச நீ​தி​மன்​றம்​, அவருக்​கு ​முன்​ ஜாமீன்​ வழங்​கியது.

x