[X] Close

சர்கார் சர்ச்சை – ரஜினி கண்டன ட்விட்


sarkar-rajini

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 00:17 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சர்கார் சர்ச்சையாகி இருக்கிற இந்த நிலையில், ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவினரின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு படக்குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து இன்று இரவு (8ம் தேதி) இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் படை குவிந்துள்ளது. கைது என சன்பிக்சர்ஸ் டிவிட் தட்ட, இன்னும் பரபரப்பு கிளம்பியது.

மேலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்து ட்விட் பதிவிட்டார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு காட்சிகளை நீக்கக் கோருவது சட்டத்துக்குப் புறம்பானது.

போராட்டம் நடத்துவதும் திரையிடலைத் தடுப்பதும் பேனர்களைக் கிழிப்பதும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள்.

இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close