[X] Close

ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – ‘கைது’ என சன்பிக்சர்ஸ் ட்விட்டால் பரபரப்பு - பாதுகாப்புப் பணியில் போலீசார் 


murugadoss-house-police

சன்பிக்சர்ஸ் பதிவிட்ட ட்விட்...

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 23:32 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் வந்ததை அடுத்து, சன்பிக்சர்ஸ் ஏ.ஆர்.முருகதாஸ் கைது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் புதிய சாதனையை எட்டியுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்ற அதேவேளையில், அதிமுகவினரிடையே இந்தப் படம் சலசலப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் கோமளவல்லி எனும் பெயர், இலவசப் பொருட்களை எரிப்பது என தவறான விஷயங்களை விஷமத்தனமாக படமாக்கியிருப்பதாக அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முதலான பலரும் சர்கார் படத்தின் சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்கவேண்டும். இல்லையெனில் சட்டப்படி சந்திப்போம் என்று சொல்லிவந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் சர்கார் படம் ஓடுகிற தியேட்டர்களில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேனர்களைக் கிழித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. நிறைய தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை 9ம் தேதி மதியக் காட்சியில் இருந்து திரையிடப்படும் என விநியோகஸ்தர்கள் தரப்பிலும் தயாரிப்பாளர் தரப்பிலும் முடிவு செய்திருப்பதை விநியோகஸ்தரும் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியம் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீசார் குவிப்பு. அவரை கைது செய்துள்ளது போலீஸ் என்று பதிவிட்டது.

இதையடுத்து திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது.

ஆனால், சர்கார் படம் குறித்து பல இடங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே அவர் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, இயக்குநர் முருகதாஸ் வீட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close