[X] Close

சுயலாபத்துக்காக தேவர்மகன் 2-வை எதிர்ப்பதா? – நடிகர் கருணாஸ் கண்டனம்


devarmagan-2-karunas

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 23:05 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சுயலாபத்துக்காக டாக்டர் கிருஷ்ணசாமி தேவர்மகன் 2 படத்தை எதிர்ப்பதா என்று நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தை அடுத்து தேவர் மகன் 2 படத்தை எடுக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் கிருஷ்ணசாமி, தேவர்மகன் என்று எடுக்காமல், தேவேந்திரர் மகன் என்று எடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது:

எந்த மாதிரியான படம் எடுக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளரும் நடிகரும்தான் முடிவு செய்யவேண்டும். வேறு யாரோ முடிவு செய்யக்கூடாது.

சுயலாபத்துக்காக தேவர்மகன் 2-வை எதிர்ப்பதா? தேவர்மகன் படத்தால் 25 ஆண்டுகளாக தீராத பகை ஏற்பட்டுள்ளது என்று கிருஷ்ணசாமி பொய் சொல்லுகிறார். இது தவறு.

இவ்வாறு நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close