[X] Close

கதைத் திருட்டு, அதிக கட்டணம், உத்தமன் வேஷம்; அரசின் இலவசப் பொருளை எரிப்பது வன்முறையைத் தூண்டும் செயல் – அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்


sarkar-cvshanmugam

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 19:40 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கதையைத் திருடியிருக்கிறார்கள். தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். விஜய் உத்தமன் போல் வேஷம் போடுகிறார். தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய இலவசப் பொருட்களை படத்தில் எரிப்பது போல் காட்டி, வன்முறைக்குத் தூண்டுகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

மூன்று மணி நேரத்தில் முதல்வராகி விட்டதாக கதையில் வரும் விஜய், உத்தமன் போல் நடித்திருக்கிறார். நிஜத்திலும் உத்தமனாகக் காட்டிக்கொள்ள முயலுகிறார்.

கதையைத் திருடியிருக்கிறார்கள். அந்தக் கதையைப் படமாக்கி, தியேட்டர்களில் மக்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூல் செய்து, யாருடைய பணத்திலோ நடித்து மக்களை ஏமாற்றும் விஜய், அரசாங்கத்தை விமர்சிக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தை விமர்சிக்கலாம். தப்பில்லை. நடிகராக இருந்தாலும் சாதாரணப் பாமரனாக இருந்தாலும் அரசை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அதேசமயம், சினிமாவில் நடிக்கும் விஜய், நிஜத்திலும் நடிக்கிறார். தமிழக அரசு மக்களுக்குத் தந்துள்ள இலவசப் பொருட்களை எரிப்பதாகப் படத்தில் காட்டுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. வன்முறையைத் தூண்டும் செயல். ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கத்தை, ஏதோ நடுவிலேயே கலைப்பது போல் சினிமா பண்ணிவிட்டு, வெளிநாட்டின் சதியுடன் விஜய் தீவிரவாதத்தைத் தூண்டுகிறார்.

நடிகர் விஜய், சர்கார் படத்தின் தயாரிப்பாளர், படத்தைத் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close