[X] Close

தெருநாய்களை மையப்படுத்தும் படம்: அடுத்தாண்டு இயக்குநராகிறார் விஷால்


vishal-becomes-director-soon

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 17:29 pm
  • அ+ அ-

தெருநாய்களை மையப்படுத்தும் படத்தை விஷால் இயக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் ‘செல்லமே’ படத்தின் மூலம் நடிகரானவர் விஷால். நடிகராக மட்டுமின்றி, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரிப்பாளராகவும் மாறி, தன்னுடைய படங்களைத் தானே தயாரித்து வருகிறார்.

அத்துடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், விஷால் விரைவில் இயக்குநராக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய நீண்ட நாள் கனவு, நனவாக இருக்கிறது. முழுவதும் விலங்குகளை மையப்படுத்தி, குறிப்பாகத் தெருநாய்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்தில், பிரபல நடிகை ஒருவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close