[X] Close

டிராவிட் இடம் கற்றுக்கொள்ளுங்கள் கோலி: சித்தார்த் அறிவுரை


it-may-be-time-to-teach-yourself-to-think-what-would-dravid-say-before-speaking-in-future

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 12:03 pm
  • அ+ அ-

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நீங்கள் இனிமேலும் கிங்கோலி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம். அடுத்த முறை எதிர்காலத்தில், இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

சர்ச்சை என்ன?

விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று ரசிகர் ஒருவர் கோலியை சாடியிருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுத்த விராட், இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சித்தார்தும் கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close