[X] Close

’2.0’ குறித்து வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்


arrahman-tweets-about-2point0

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 11:56 am
  • அ+ அ-

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படம் குறித்த ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட், சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நீண்ட வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தொடங்கிய கிராபிக்ஸ் பணிகளை, சில நாட்களுக்கு முன்பு தான் முடித்து படத்துடன் இணைத்திருக்கிறார்கள்.

படத்தின் இசை, டீஸர், ட்ரெய்லர் என சமூகவலைத்தளத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் முன்பே பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பின்பு, கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்தவுடன் இன்னும் கொஞ்சம் இசையை மெருக்கேற்றலாம் என்று மீண்டும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது அப்பணிகளையும் முடித்து மிக்ஸிங் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இப்பணிகளுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “2.0 படத்தின் 6-வது ரீலுக்கான இசையை மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்.. உணர்வுப்பூர்வமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் சகாப்தம் என்பேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஏனென்றால், முதன் முறையாக ஒரு படத்தின் பணிகளுக்கு இடையே ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதன் முறையாகும்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close