[X] Close

ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’: மகேஷ் பாபு பாராட்டு


mahesh-babu-tweets-about-sarkar

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 22:19 pm
  • அ+ அ-

ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’ எனப் பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு.

விஜய் நடிப்பில் நேற்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. “சர்கார் படம், அரசியல் ரீதியாகக் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளது. முழுவதும் ரசிக்கும்படி இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம். ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம்தான், மகேஷ் பாபுவின் நேரடி முதல் தமிழ்ப்படம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close