[X] Close

பாகுபலி வசூலை முறியடித்தது சர்கார்


sarkar-vasool

சர்கார் விஜய்

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 18:53 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது சர்கார் திரைப்படம் என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளியான 6ம் தேதி ரிலீசானது. மிகப்பிரமாண்டமான முறையில், வெளியாகி உள்ள இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய முதலமைச்சர் பற்றிய பேச்சு பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து செங்கோல் கதாசிரியரும் இணை இயக்குநருமான வருண் ராஜேந்திரன், இது என் கதை என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் செயற்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆமாம், செங்கோல் கதைதான் சர்காரின் கதை என்று சொல்ல, முருகதாஸோ, அதெப்படி, நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் இந்த வழக்கு கோர்ட்டுக்குப் போனது. வழக்கு எடுத்துக்கொள்ளும் நாளில், திடீரென சமரசத்துக்கு ஒத்துக்கொண்டார். பிறகு சர்கார் சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. இதையடுத்து தியேட்டரில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இத்தனை களேபரங்களுக்கு இடையே ரிலீசான சர்கார், நேற்று ரிலீசான ஒரேநாளில் வசூல் சாதனை படைத்துள்ளது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

திரைப்படத் தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் இதுகுறித்து தெரிவிக்கும் போது, மிகப்பிரமாண்டமான வெற்றியை சர்கார் அடைந்திருக்கிறது. இதுவரை வந்த வசூல் சாதனையையெல்லாம் முறியடித்திருக்கிறது. பாகுபலி முதலான பிரமாண்டமான படங்களின் வசூல் சாதனைகளையெல்லாம் கடந்து ஒரேநாளில் தமிழகத்தில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது.

அதேபோல சென்னையில் இதுவரை முதல் நாள் வசூல், ஒண்ணேமுக்கால் கோடி அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் சர்காரின் சென்னை வசூல் கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதேகருத்தையே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும் தெரிவித்தார்.

மிகப்பெரிய சன் பிக்சர்ஸ், மிகப்பெரிய நடிகர் விஜய், மிகப்பிரமாண்டமான இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார், இதுவரை வந்த வசூல் சாதனைகளையெல்லாம் முறியடித்திருக்கிறது. கிட்டத்தட்ட 650க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இத்தனை பெரிய வெற்றியைக் கொடுத்த சன்பிக்சர்ஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close