[X] Close

தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ’சர்கார்’: தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா


sarkar-vasool

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 17:54 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ’சர்கார்’ என்று  தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாக இப்படம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்று வருகிறது.

’சர்கார்’ படம் பார்த்துவிட்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ‘சர்கார்’ தொடர்பாக 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சர்கார் மாபெரும் சமூக, அரசியல் மாற்றத்திற்கான விதை. வேலைக்காரனைப் போல் மாற வேண்டியது அரசியலும், அரசியலமைப்பும் மட்டுமில்லை, மக்களும்தான் என்பதை அழுத்தமாக விதைத்திருக்கும் தளபதி விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும்  சர்கார் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

நாமும், நாடும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் சர்கார். பொழுதுபோக்கோடு மக்களுக்கான பொறுப்பையும் உணர்த்தியிருக்கும் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்

இவ்வாறு ஆர்.டி.ராஜா கூறியிருக்கிறார்.

மேலும், ‘சர்கார்’ வசூலில் அனைத்து தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்திருப்பது குறித்து “வெளியான முதல் நாள் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை, உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று சாதனை படைத்திருக்கும் சர்கார் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஆர்.டி.ராஜா

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close