[X] Close

‘இந்தியன் 2’வில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்?


dulquer-salman-in-indian-2

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 14:18 pm
  • அ+ அ-

‘இந்தியன் 2’ படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல்ஹாசன். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருப்பதால், ரிலீஸுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் ‘இந்தியன் 2’ படத்தைத் தயாரிக்க இருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகும் எனத் தெரிகிறது. நயன்தாரா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காஜல் அகர்வாலும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கலாம் என்றொரு தகவல் உலா வருகிறது. மேலும், துல்கர் சல்மான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, விரைவில் ‘இந்தியன் 2’ படம் தொடங்கப்படும் என இன்று (நவம்பர் 7) அறிவித்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close